Recent Post

6/recent/ticker-posts

ஜாரியா நிலக்கரி சுரங்கத்தில் தீ, மண் சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வு தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட ஜாரியா பெருந்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves revised Zaria Master Plan for rehabilitation of families affected by fire and landslide in Zaria coal mine

ஜாரியா நிலக்கரி சுரங்கத்தில் தீ, மண் சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வு தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட ஜாரியா பெருந்திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

திருத்தப்பட்ட திட்டத்தை அமலாக்க ரூ.5,940.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மறு குடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்கள் பொருளாதார ரீதியில் தற்சார்பு பெறுவதை உறுதி செய்ய திறன் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ளவும் வருவாய் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு குடியமர்வு செய்யப்பட்ட பகுதிகளில் சாலைகள், மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல், பள்ளிகள், மருத்துவமனைகள், திறன் மேம்பாட்டு மையங்கள், சமூக கூடங்கள் நிறுவுதல் போன்ற உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். திருத்தியமைக்கப்பட்ட ஜாரியா பெருந்திட்ட அமலாக்க குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இவை செயல்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel