பிரதமர் திரு நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 - 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார கோரிக்கைகளை வலியுறுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், வளர்ச்சி விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்தினார்கள்.
பிரேசில் அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்காகவும் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
"உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பு" என்ற தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றினார். பின்னர், பிரதமர் "பன்முகத்தன்மை, பொருளாதார-நிதி விவகாரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த அமர்வில் பிரிக்ஸ் கூட்டாண்மை மற்றும் விருந்தினர் நாடுகள் பங்கேற்றன. தலைவர்கள் பங்கேற்ற அமர்வின் நிறைவில், உறுப்பு நாடுகள் 'ரியோ டி ஜெனிரோ பிரகடனத்தை' ஏற்றுக்கொண்டன.
0 Comments