மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், 2024-25-ம் ஆண்டிற்கான தூய்மை பணி கணக்கெடுப்பிற்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்த விழாவில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், அத்துறைக்கான இணையமைச்சர் திரு டோகன் சாஹு முன்னிலையில், நாட்டில் தூய்மைப் பணிகளைத் திறம்பட மேற்கொண்ட 23 நகரங்கள் பாராட்டுதல்களைப் பெற்றன.
இந்தியாவின் புதிய தலைமுறைக்கான நகரங்களாக, அகமதாபாத், போபால், லக்னோ போன்றவை சிறந்த தூய்மை நகரங்களாக உருவெடுத்துள்ளன. மஹாகும்ப மேளாவிற்கான சிறப்பு அங்கீகாரம் உட்பட 43 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2024-25-ம் ஆண்டிற்கான தூய்மைக்கான விருது வழங்கும் விழாவில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், சிறந்த கங்கா நகரத்திற்கான விருதை பிரயாக்ராஜு நகருக்கு வழங்கினார்.
செகந்திராபாத் கண்டோன்மென்ட் பகுதி, சுகாதார முயற்சிகளுக்கான சிறந்த கண்டோன்மென்ட் வாரியமாக கௌரவிக்கப்பட்டது.
துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கான சிறந்த அர்ப்பணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜிவிஎம்சி விசாகப்பட்டினமும், ஜபல்பூர், கோரக்பூர் ஆகியவை சிறந்த துப்புரவுப் பணியாளர்களுக்கான பாதுகாப்பான நகரம் என அறிவிக்கப்பட்டன.
ஏராளமான மக்கள் பங்கேற்ற உலகின் மிகப்பெரிய விழாவான மஹாகும்ப மேளாவின் போது, சிறப்பான நகர்ப்புற கழிவு மேலாண்மையை திறம்பட மேற்கொண்டதாக உத்தர பிரதேச மாநில அரசு, பிரயாக்ராஜ் மேளா சிறப்பு அதிகாரி மற்றும் பிரயாக்ராஜ் நகராட்சிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
0 Comments