Recent Post

6/recent/ticker-posts

ரோமில் நடந்த 88-வது கோடெக்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தியாவின் தினை தரநிலைக்கு அங்கீகாரம் / India’s millet standard recognized at 88th Codex Executive Committee meeting in Rome

ரோமில் நடந்த 88-வது கோடெக்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தியாவின் தினை தரநிலைக்கு அங்கீகாரம் / India’s millet standard recognized at 88th Codex Executive Committee meeting in Rome
ஜூலை 14 முதல் 18, 2025 வரை இத்தாலியின் ரோமில் உள்ள உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையத்தின் நிர்வாகக் குழுவின் 88வது அமர்வில் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தியா தலைமையில் மாலி, நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகளை இணைத் தலைவர்களாகக் கொண்ட இந்தப் பணியின் முன்னேற்றத்தை சிறுதானியக் குழு மதிப்பாய்வு செய்தது.

இதற்கான குறிப்பு விதிமுறைகள் ஏப்ரல் 2025 இல் நடைபெற்ற தானியங்கள், பருப்பு வகைகள் தொடர்பான கோடெக்ஸ் குழுவின் 11-வது அமர்வில் இறுதி செய்யப்பட்டன.

கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணைய நிர்வாகக் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் துணை தலைமை இயக்குநர் திரு. காட்ஃப்ரே மாக்வென்சி, உலக சுகாதார அமைப்பின் சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு உதவி தலைமை இயக்குநர் டாக்டர் ஜெர்மி ஃபாரர் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்ட அமர்வில் பங்கேற்றது.

இந்த நிகழ்வில் கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஆலன் அசெகெல், ஆணையத்தின் செயலாளர் திருமதி சாரா காஹில் மற்றும் உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்பான கோடெக்ஸ் குழுவின் 23-வது அமர்வால் பரிந்துரைக்கப்பட்ட புதிய பேரீச்சம்பழங்களின் புதிய தரநிலைகள் குறித்து இந்தியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை இந்த அமர்வு விமர்சன ரீதியாக மதிப்பாய்வு செய்தது. இந்தத் தரநிலைகளை இறுதி செய்வதில் இந்தியாவின் முயற்சிகளை நிர்வாகக் குழு பாராட்டியது.

மேலும் நவம்பர் 2025 இல் திட்டமிடப்பட்ட கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் கமிஷனின் 48-வது அமர்வில் மேலும் ஒப்புதலுக்காக அவற்றை அங்கீகரித்தது. புதிய மஞ்சள் மற்றும் புதிய ப்ரோக்கோலிக்கான தரநிலைகளை உருவாக்குவதற்கான புதிய பணித் திட்டங்களில் இந்தியா இணைத் தலைவராகவும் செயல்படும்.

கோடெக்ஸ் வியூகத் திட்டம் 2026–2031-க்கான கண்காணிப்பு கட்டமைப்பின் மீதான விவாதங்களில் இந்தியா தீவிரமாக பங்கேற்றது,

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால், அங்கீகரிக்கப்பட்ட பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, கிழக்கு தைமூர் போன்ற அண்டை நாடுகளுக்கான அதன் திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் இந்தியா தெரிவித்தது.

2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, மசாலா மற்றும் சமையல் மூலிகைகளுக்கான கோடெக்ஸ் குழுவிற்கு இந்தியா தலைமை தாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel