Recent Post

6/recent/ticker-posts

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி - 11.19% / Tamil Nadu's economic growth - 11.19%

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி - 11.19% / Tamil Nadu's economic growth - 11.19%

இந்தியாவிலேயே மிக அதிகமாக அற்புதமான வேகத்தில் வளரக்கூடிய பொருளாதார வளர்ச்சியில் இன்று தமிழகம் இருந்து வருகிறது. தமிழகம் கடந்த 14 ஆண்டுகளாக ஒன்றை இலக்க அடிப்படையில் தான் பொருளாதார வளர்ச்சி இருந்து வந்துள்ளது. கடந்தாண்டு வரை 9 சதவீதம் என்ற கணக்கீட்டில் தான் இருந்துள்ளது.

தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த திமுக ஆட்சியில்தான் முன்பு இரட்டை இலக்க எண்ணில் பொருளாதார வளர்ச்சி உயர்ந்திருந்தது.

ஆனால், மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிடுள்ள தரவுகளின் அடிப்படையில் தமிழகம் தற்போது பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, தனிநபர் வருமானமும் வளர்ச்சி இன்னும் பன்மடங்கு உயரும். மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான வளர்ச்சியாக இல்லாமல் மாநில முழுவதுக்குமான பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்காகக் கிடைத்த வெற்றிதான் மத்திய அரசின் தரவுகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. இதன்வாயிலாக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel