Recent Post

6/recent/ticker-posts

12 மெட்ரோ நிலையங்களை கொண்ட 11.165 கி.மீ தொலைவிலான லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 11.165 km Lucknow Metro Rail Project with 12 Metro Stations

12 மெட்ரோ நிலையங்களை கொண்ட 11.165 கி.மீ தொலைவிலான லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 11.165 km Lucknow Metro Rail Project with 12 Metro Stations

உத்தரபிரதேசத்தில் லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தின் 1பி கட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது.

11.165 கி.மீ தொலைவிற்கு 7 சுரங்கப்பாதை மற்றும் 5 உயர்த்தப்பட்ட நிலையங்களுடன் கூடிய 12 நிலையங்களுடன் இந்த வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த 1பி கட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, லக்னோ நகரம் 34 கி.மீ தொலைவிலான மெட்ரோ ரயில் கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.

லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தின் 1பி கட்டம் நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. 1பி கட்டம் இந்நகரத்தில் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் முக்கிய விரிவாக்கமாக உள்ளது.

லக்னோ மெட்ரோ திட்டத்தின் 1பி கட்டம் சுமார் 11.165 கி.மீ தொலைவிலான புதிய மெட்ரோ பாதையைக் கொண்டிருக்கும். இது நகரத்தின் பழமையான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும்.

அமினாபாத், யஹியாகஞ்ச், பாண்டேகஞ்ச், சௌக் போன்ற வணிக மையங்கள், கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் (மருத்துவக் கல்லூரி) போன்ற முக்கியமான சுகாதார வசதிகள், படா இமாம்பரா, சோட்டா இமாம்பரா, புல் புலையா, கடிகார கோபுரம், ரூமி தர்வாசா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள், நகரத்தின் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க உணவு கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற இடங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைப்பதை இந்த கட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel