ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பண்டியில் பசுமை விமான நிலையத்தை ரூ.1507 கோடி செலவில் கட்ட வேண்டும் என்ற இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சம்பல் நதிக்கரையில் அமைந்துள்ள கோட்டா நகரம் ராஜஸ்தானின் தொழில்துறை தலைநகராக திகழ்கிறது. அத்துடன் இந்தியாவின் கல்வி சார்ந்த பல்வேறு பயிற்சிகளுக்கு மையமாகவும் கோட்டா உள்ளது.
ஏ-321 ரக விமானங்களை இயக்கும் வகையில் பசுமை விமான நிலைய மேம்பாட்டிற்காக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு 440.06 ஹெக்டேர் நிலப்பரப்பை ராஜஸ்தான் அரசு அளித்துள்ளது.
ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளையும் போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் 1000 பயணிகளையும் கையாளும் வகையில் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் விமானநிலைய முனைய கட்டடம் அமைப்பதும் இத்திட்டத்தில் உள்ளடங்கும்.
0 Comments