கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் பங்கேற்றார்.
இப்போட்டியில் சீன வீராங்கனை கியாங்கே மா 243.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தென் கொரியாவின் ஜின் யாங், 241,5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
மனு பாக்கர் 219.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார். அணிகளுக்கான போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கர், சுருச்சி சிங், பாலக் குலியா ஆகியோர் அடங்கிய அணி, 1730 புள்ளிகள் பெற்று 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
இப்போட்டியில் சீனா, 1740 புள்ளிகளுடன் தங்கம், கொரியா 1731 புள்ளிகளுடன் வௌளிப் பதக்கத்தை தட்டிச் சென்றன.
0 Comments