ஏல விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், அதிகாரிகளிடமிருந்து தேவையான நடைமுறைகளுடன் போட்டிகளை நடத்த குஜராத் மாநில அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், குஜராத் அரசுக்குத் தேவையான மானிய உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். விளையாட்டுப் போட்டிகளின் போது ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருவார்கள் என்பதால் உள்ளூர் வணிகங்கள் பயனடைந்து அதிக வருவாய் ஈட்டப்படும்.
உலகத்தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன பயிற்சி வசதிகள் ஆகியவற்றுடன் தீவிர விளையாட்டு கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு சிறந்த நகரமாக அகமதாபாத் உள்ளது.
உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம் அதன் திறன் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.


0 Comments