Recent Post

6/recent/ticker-posts

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் / PM Modi inaugurates 3 Vande Bharat trains, metro services on Yellow Line in Bengaluru

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் / PM Modi inaugurates 3 Vande Bharat trains, metro services on Yellow Line in Bengaluru

பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் - பெலகாவி, அமிர்தசரஸ் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் சேவைகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

இது பிரதமர் தொடக்கி வைத்த 150வது வந்தே பாரத் ரயிலாகும். பின்னர், பிரதமர் மெட்ரோ ரயிலில் ராகிகுட்டாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை பயணம் செய்தார்.

தொடர்ந்து, பெங்களூரில் மஞ்சள் தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. இதனிடையே, மூன்றாவதாக மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

ஆர்.வி சாலை ரயில்நிலையம் முதல் பொம்மசந்திரா ரயில்நிலையம் வரையிலான இந்த மஞ்சள் தடத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை பிரதமர் தொடக்கி வைத்தார்.

எலக்ட்ரானிக் சிட்டி பகுதியுடன் மெட்ரோ ரயில்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel