தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, மேலும் அவரது வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. விசாரணையில் நீதிபதி வீட்டில் பணம் இருந்தது உறுதியானது. தொடர்ந்து நீதிபதி, பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.
நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.
0 Comments