சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியத் தொகை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியத் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கும் (ஆண்டுதோறும் 9 சிலிண்டர் வரை) இந்த மானியம் வழங்கப்படும். 5 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களுக்கு இந்த மானியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்.
2025-26-ம் நிதியாண்டுக்கான இந்த மானியத் தொகை காரணமாக அரசுக்கு 12,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கான வைப்புத் தொகை இல்லாமல் சமையல் எரிவாயு இணைப்பு, ரெகுலேட்டர், பாதுகாப்பான எரிவாயு ட்யூப், நுகர்வோர் எரிவாயு அட்டை, இவற்றை நிறுவுவதற்கான கையேடு ஆகியவை அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை (01.07.2025) 10.33 கோடி பயனாளிகள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இணைப்பைப் பெற்றுள்ளனர்.
0 Comments