வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருவதால் அதனை ஈடு செய்யும் வகையில் ரூ.30,000 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைசச்கத்தால் பகிர்ந்தளிக்கப்படும். இந்த இழப்பீட்டுத் தொகை 12 தவணைகளாக வழங்கப்படும்.
இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகிய மூன்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் நுகர்வோருக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்கிறது.
2024-25-ம் ஆண்டில் சர்வதேச அளவில் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டும் இந்த விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்தும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
சர்வதேச அளவில் சமையல் எரிவாயு விலைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
0 Comments