தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடு இப்போது ஒவ்வொரு மாதமும் 28 ஆம் தேதி (அல்லது 28 ஆம் தேதி விடுமுறை என்றால் அடுத்த வேலை நாளில்) வெளியிடப்படும்.
இந்தக் குறியீடு மூல நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் தொகுக்கப்படுகிறது. திருத்தக் கொள்கையின்படி இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தத்திற்கு உட்படும்.
ஜூலை 2025 க்கான தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாகும். இது ஜூன் 2025 இல் 1.5 சதவீதமாக இருந்தது .
ஜூலை 2025 க்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே (-) 7.2 சதவீதம், 5.4 சதவீதம் மற்றும் 0.6 சதவீதம் ஆகும்.
ஜூலை 2024 இல் 149.8 ஆக இருந்த தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடுகள் தற்போது 155.0 ஆக உள்ளது. ஜூலை 2025 மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் முறையே 107.7, 156.9 மற்றும் 221.5 ஆக உள்ளன.


0 Comments