அசாம், திரிபுரா மாநிலங்களுக்கு மத்திய சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு புதிய கூறுகளின் செலவுக்கு ரூ.4,250 கோடி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்ட நான்கு புதிய கூறுகளின் ஒட்டுமொத்த செலவு ரூ.7,250 கோடியாக இருக்கும். இதில் அசாம் சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்புகளின் மத்திய துறை திட்டத்திற்கு ரூ.4000 கோடியும் மற்றும் திரிபுராவுக்கு ரூ.250 கோடியும் மத்திய அரசு வழங்கும். எஞ்சியுள்ள தொகையில் ரூ.3,000 கோடி அசாம் மாநில அரசால் அதன் வளங்களிலிருந்து வழங்கப்படும்.
மத்திய அரசும், அசாம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் இனக்குழுக்களுடன் கையெழுத்திட்ட தீர்வு ஒப்பந்தத்தின்படி, ரூ.4,250 கோடியில், 205-26 நிதியாண்டு முதல் 2029-30 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.4,000 கோடி அசாமின் மூன்று கூறுகளுக்கும், 2025-26 நிதியாண்டு முதல் 2028-29 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு ரூ.250 கோடி திரிபுராவின் ஒரு கூறுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments