சென்னை தலைமைச் செயலகத்தில், கடந்த 3ம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரன் விருதுகளை காண்பித்து வாழ்த்துப்பெற்றர். மேலும் கள்ளக்குறிச்சி - 2 மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் லாப பங்கீட்டு ஈவுத்தொகையாக ரூ.22.60 கோடிக்கான காசோலைகளை வழங்கினார்.
கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு இவ்வரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
கரும்பு விவசாயிகளின் நலன் கருதி இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் சர்க்கரை ஆலைகள் நலிவடைந்த நிலையிலிருந்து மீண்டு வருகின்றன.
0 Comments