வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும்.
இந்நிலையில், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புகள் 5.50 சதவிகிதம் மாற்றாமல் நிலையாக வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது, வட்டி விகிதத்தை ஒருமனதாக நிலைநிறுத்தி, நடுநிலையான நிலைப்பாட்டைத் தொடர முடிவு செய்தது. இதனால் வீட்டு மற்றும் வாகன கடன்களின் மாதாந்திர தவணைகள் மாறாமல் நிலையாக இருக்கும்.
உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்து நீடித்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. அதே வேளையில், பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்தாலும், இது பெரும்பாலும் நிலையற்ற உள்ள உணவு விலைகள் காரணமாகும் என்றார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.
0 Comments