Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் பிரதமரின் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் / Central government approves setting up of Prime Minister's Textile Parks in 7 states including Tamil Nadu

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் பிரதமரின் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் / Central government approves setting up of Prime Minister's Textile Parks in 7 states including Tamil Nadu
தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்திரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்தஆடைகள் பூங்கா (பிஎம் மித்ரா) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் பூங்காவுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,197.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுவரை ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான பணிகளுக்காக 291.61 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பிஎம் மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முறையே 1,894 கோடி ரூபாய் மற்றும் 2,063 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீ்ட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கைத்தறி துறையை நவீனமயமாக்கவும் வலுப்படுத்தவும், கைத்தறி நெசவாளர்களின் நலன்களுக்காகவும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலப்பொருள் விநியோகத் திட்டம் என்ற இரண்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel