79th TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2025
79வது தமிழக சுதந்திரதின விருது 2025
TAMIL
79th TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2025 / 79வது தமிழக சுதந்திரதின விருது 2025: தகைசால் தமிழர் விருது இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது இஸ்ரோ தலைவர் முனைவர் டாக்டர் வி. நாராயணனுக்கு வழங்கப்பட்டது.
கல்பனா சாவ்லா விருது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு வழங்கப்பட்டது.
கல்பனா சாவல் விருது
79th TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2025 / 79வது தமிழக சுதந்திரதின விருது 2025: மாநில அரசு சார்பாக கல்பனா சாவ்ல் விருதும் இன்று வழங்கப்பட்டிருக்கிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லின் விருது வழங்கிய கௌரவித்தார்.
காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி(22). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயிற்று வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் பேட்மிட்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர்.
துளசிமதி முருகேசன் கடந்த 2022ம் ஆண்டு சீனாவின் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்றார். அதில் SL3-SU5 மற்றும் SU5 ஆகிய பிரிவுகளில், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளார்.
நல்ஆளுமை விருதுகள்
79th TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2025 / 79வது தமிழக சுதந்திரதின விருது 2025: அன்பாடு ஒன்றில் விழிப்புணர்வு, நீர்வள மேம்பாடு ஆகியவற்றின் மூலம் ஊரக மேம்பாடு முயற்சிகள் மேற்கொண்டதற்காக மருத்துவர் வி.பிரசன்னகுமார் ஐபிஎஸ் உதவி காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பி.பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வி.யமுனா ஆகியோருக்கு நல் ஆளுமை விருதுகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்
சுய சான்றிதழ் திட்டத்தின் மூலம் வீடு, கட்டிட வரைபடம் அனுமதி பெறும் முறையை எளிதாக்கி வழங்கியதற்காக ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா, ஐஏஎஸ் அதிகாரிகள் பா.கணேசன், லட்சுமி பிரியா, த. ஆனந்தன் ஆகியோருக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா ஐஏஎஸ், ஆதிதிராவிடர் நலம் ஆணையர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை, க.சு.கந்தசாமி ஐஏஎஸ் ஆகியோருக்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
கன்னியாமகுமரியில் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை அமைத்ததற்காக ஐஏஎஸ் அதிகாரி இரா.செல்வராஜுக்கும், தமிழ் மொழியை உலகளவில் மேம்படுத்தியதற்காக தமிழ் இணையக் கல்வி கழகத்தின் இயக்குநர் (பொறுப்பு) ஆர்.கோமகனுக்கும் நல் ஆளுமை விருதை முதல்வர் வழங்கி கெளரவித்தார்.
தமிழகத்தின் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகள் 2025
1. சிறந்த மாநகராட்சி
- முதல் பரிசு - ஆவடி
- இரண்டாம் பரிசு - நாமக்கல்
2. சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலம்
- முதல் பரிசு - 6 வது மண்டலம்
- இரண்டாம் பரிசு - 13 வது மண்டலம்
3. சிறந்த நகராட்சி
- முதல் பரிசு - ராஜபாளையம்
- இரண்டாம் பரிசு - ராமேசுவரம்
- மூன்றாம் பரிசு - பெரம்பலூர்
4. சிறந்த பேரூராட்சி
- முதல் பரிசு - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர்
- இரண்டாம் பரிசு - திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர்
- மூன்றாம் பரிசு - திண்டுக்கல் மாவட்டம் நத்தம்
சுதந்திர தின சிறப்பு தங்கப்பதக்கம் விருது 2025
79th TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2025 / 79வது தமிழக சுதந்திரதின விருது 2025: 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
- க.த.பூரணி - காவல் துணை கண்காணிப்பாளர் - சைபர் கிரைம் பிரிவு - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - சென்னை
- பி.உலக ராணி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - திருநெல்வேலி
- மா. லதா - காவல் ஆய்வாளர் - கடத்தல் தடுப்பு பிரிவு - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - சென்னை
- மு . செந்தில் குமார் - காவல் ஆய்வாளர் - மகுடஞ்சாவடி காவல் நிலையம் - சேலம் மாவட்டம்
- ஜெ. கல்பனாதத் - துணை காவல் கண்காணிப்பாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - தஞ்சாவூர்
- வே. சந்தான லட்சுமி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - திண்டுக்கல்
- மா. வசந்த குமார் - காவல் ஆய்வாளர் - பெருமாநல்லூர் காவல் நிலையம் - திருப்பூர் மாவட்டம்
- வெ. ஜெகநாதன் - காவல் ஆய்வாளர் - வடக்கு காவல் நிலையம் - திருப்பூர் மாநகரம்
- கோ. திலகாதேவி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - அரியலூர்
- இரா. புவனேஸ்வரி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - நாகப்பட்டினம்
இதேபோன்று பொதமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியை பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டள்ளார்கள்.
- முனைவர் - மஹேஷ்வர் தயாள் - கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் -சென்னை
- ஜெ. மகேஷ் - காவல்துறை துணை தலைவர் - நுண்ணறிவு (உள்நாட்டு பாதுகாப்பு) - சென்னை
- நை. சிலம்பரசன் - காவல் கண்காணிப்பாளர் - திருநெல்வேலி மாவட்டம்
- கு. பிரவீன் குமார் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - தலைமையகம் - சென்னை
- தா. மேரி ரஜு - காவல் ஆய்வாளர் - சென்னை பெருநகர காவல்துறை
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.
ENGLISH
79th TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2025: The Thakaisal Tamil Award was presented to Indian Union Muslim Party National President Prof. K.M. Kader Mohideen.
The Dr. A.P.J. Abdul Kalam Award was presented to ISRO Chairman Dr. V. Narayanan. The Kalpana Chawla Award was presented to Para-badminton player Thulasimathi Murugesan from Kanchipuram district.
The Chief Minister's State Youth Award was presented to Para-Olympic player Mariyappan.
Kalpana Chawla Award 2025
79th TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2025: The Kalpana Chawla Award was also presented today on behalf of the state government. At a function held today on the occasion of Independence Day, Tamil Nadu Chief Minister M.K. Stalin honored Thulasimathi Murugesan by presenting the Kalpana Chawla Award.
Murugesan's daughter Thulasimathi (22) is from the Old Railway Road area of Kanchipuram. She is studying Veterinary Science. She is a differently-abled person and is interested in badminton.
Thulasimathi Murugesan represented India at the 2022 Para Asian Games in China. She won gold, silver and bronze medals in the SL3-SU5 and SU5 categories.
Good Governance Awards 2025
79th TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2025: Chief Minister Mukherjee Stalin presented Good Governance Awards to Dr. V. Prasannakumar IPS Assistant Superintendent of Police, Talukdar P. Balakrishnan, and Block Development Officer V. Yamuna for their efforts in rural development through awareness and water resource development.
IAS officer Kakarla Usha, IAS officers Pa. Ganesan, Lakshmi Priya, T. Anandan, and Lakshmi Priya, IAS, Secretary, Adi Dravidar and Tribal Welfare Department, Adi Dravidar Welfare Commissioner Anand, Director, Tribal Welfare Annadurai, and K.S. Kandasamy, IAS, were awarded the Good Governance Award for their excellent implementation of the welfare schemes of the Adi Dravidar and Tribal Welfare Department.
The Chief Minister honored IAS officer I. Selvaraj for constructing a glass fiber bridge connecting the Thiruvalluvar statue with the Vivekananda Rock in Kanniyakumari, and R. Gomakan, Director (In-charge) of the Tamil Online Education Corporation, for promoting the Tamil language worldwide.
Tamil Nadu's Best Local Government Awards 2025
1. Best Corporation
- First Prize - Avadi
- Second Prize - Namakkal
2. Best Zone of Chennai Corporation
- First Prize - 6th Zone
- Second Prize - 13th Zone
3. Best Municipality
- First Prize - Rajapalayam
- Second Prize - Rameswaram
- Third Prize - Perambalur
4. Best Town Panchayat
- First Prize - Kanchipuram District Uttaram
- Second Prize - Trichy District Kattuputhur
- Third Prize - Dindigul District Natham
Independence Day Special Gold Medal Award 2025
79th TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2025: On the occasion of Independence Day 2025, 15 police officers will be awarded special medals.
In recognition of their outstanding performance in investigative work and in appreciation of their commitment and dedication to the work, the following 10 police officers have been selected to be awarded the Tamil Nadu Chief Minister's Special Service Medals for Police Investigation on the occasion of Independence Day 2025.
- K.T. Poorani - Deputy Superintendent of Police - Cyber Crime Unit - Crime Branch, Criminal Investigation Department - Chennai
- P. Ulaka Rani - Police Inspector - Crime Branch, Criminal Investigation Department - Tirunelveli
- M. Latha - Police Inspector - Anti-Smuggling Unit - Crime Branch, Criminal Investigation Department - Chennai
- M. Senthil Kumar - Police Inspector - Magudanjavadi Police Station - Salem District
- J. Kalpanadat - Deputy Superintendent of Police - Crime Branch, Criminal Investigation Department - Thanjavur
- V. Santhana Lakshmi - Police Inspector - Crime Branch Criminal Investigation Department - Dindigul
- M. Vasantha Kumar - Police Inspector - Perumanallur Police Station - Tiruppur District
- V. Jaganathan - Police Inspector - North Police Station - Tiruppur City
- K. Thilakadevi - Police Inspector - Crime Branch Criminal Investigation Department - Ariyalur
- I. Bhuvaneswari - Police Inspector - Crime Branch Criminal Investigation Department - Nagapattinam
Similarly, the following 5 police officers who have worked selflessly and diligently in the service of the people have been selected to be awarded the Tamil Nadu Chief Minister's Police Medals for Outstanding Public Service on the occasion of Independence Day 2025.
- Dr. - Maheshwar Dayal - Additional Director of Police and Director General of Prisons and Correctional Services - Chennai
- J. Mahesh - Deputy Superintendent of Police - Intelligence (Internal Security) - Chennai
- Nai. Silambarasan - Superintendent of Police - Tirunelveli District
- K. Praveen Kumar - Additional Superintendent of Police - Special Branch Criminal Investigation Department - Headquarters - Chennai
- Tha. Mary Raju - Inspector of Police - Chennai Metropolitan Police
Each of the awardees will be given a gold medal weighing 8 grams and a cash prize of Rs. 25,000. The above awards will be presented by the Chief Minister of Tamil Nadu.
0 Comments