Recent Post

6/recent/ticker-posts

சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு / Retail inflation at 8-year low

சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு / Retail inflation at 8-year low

நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 1.55 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 2.1 சதவீதமாகவும், 2024 ஜூலை மாதத்தில் 3.6 சதவீதமாகவும் இருந்தது.

இது 2017 ஜூன் மாதத்தில் 1.46 சதவீதமாக இருந்ததற்குப் பிறகு மிகக் குறைந்த பணவீக்கமாகும்.கடந்த ஜூலை மாதத்தில் உணவு அடிப்படையிலான பணவீக்கம் -1.76 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

சில்லறை பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கம் குறைந்ததற்கு, பருப்பு வகைகள், காய்கறிகள், தானியங்கள், முட்டை, சா்க்கரை மற்றும் இனிப்புகள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பு, கல்வி ஆகியவற்றின் விலைகள் குறைந்தது முக்கிய காரணமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel