ஃபிஜி பிரதமர் திரு சிதிவேனி ரபுகாவின் இந்திய பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
ஃபிஜியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை அமைப்பதற்கான வடிவமைப்பு, கட்டுமானம், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பிற்கான இந்தியா - ஃபிஜி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் மருந்துகளை விநியோகிக்க எச் எல் எல் லைஃப்கேர் நிறுவனம், ஃபிஜியின் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சகம் இடையே ஒப்பந்தம்.
மனித திறன் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியாவின் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஃபிஜியின் பசிபிக் பாலிடெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்தாகியுள்ளன.
2026-ம் ஆண்டில் ஃபிஜியின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இந்தியாவில் பயணம் மேற்கொள்வது, இந்திய கடற்படை கப்பல் மூலம் கடற்படையினர் 2025-ம் ஆண்டு ஃபிஜிக்கு பயணம் மேற்கொள்வது ஃபிஜி ராணுவப் படைக்கு அவசர ஊர்திகள் வழங்குதல், ஃபிஜியில் கணினிப் பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்துதல் ஃபிஜி பல்கலைக்கழகத்திற்கு ஹிந்தி, சமஸ்கிருத ஆசிரியரை அனுப்புதல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
0 Comments