தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 12 இன்று) சென்னையில் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை, கோபால் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஒரு மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கி, திட்டத்தை முறைப்படி தொடங்கினார்.
0 Comments