Recent Post

6/recent/ticker-posts

உயிரியல் பல்வகை குறியீடை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார் / Chief Minister M.K. Stalin released the Biodiversity Index


உயிரியல் பல்வகை குறியீடை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார் / Chief Minister M.K. Stalin released the Biodiversity Index

சென்னை தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், தமிழ்நாட்டின் உயிரியல் பல்வகை பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சென்னை மாநகரின் உயிரியல் பல்வகை குறியீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இது தமிழ்நாட்டின் முதலாவது நகர உயிரியல் பல்வகை குறியீடு, உயிரியல் பல்வகையை நகர திட்டமிடலில் ஒருங்கிணைக்கும் வழிகாட்டி, பசுமை விரிப்பை விரிவுபடுத்தும் திட்டங்கள், கார்பன் சேமிப்பு, வெப்பக் குறைப்பு மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு ஆகியவற்றில் இந்த தரவுகளின் பங்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சதுப்பு நில மீட்பு, பசுமை தமிழ்நாடு திட்டம், காலநிலை மாற்ற திட்டம், கடலோர பாதுகாப்பு திட்டம் போன்ற பல முயற்சிகளின் விளைவாக இந்த குறியீடு தயாரிப்பு சாத்தியமாகியுள்ளது.

சென்னை நகர உயிரியல் பல்வகை குறியீடு "ஐசிஎல்இஐ தெற்காசியா", "சென்னை மாநகராட்சி" மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel