Recent Post

6/recent/ticker-posts

காஷ்மீருக்கு முதன்முறையாக சரக்கு ரயில் சேவை தொடக்கம் / First ever freight train service to Kashmir begins

காஷ்மீருக்கு முதன்முறையாக சரக்கு ரயில் சேவை தொடக்கம் / First ever freight train service to Kashmir begins

காஷ்மீர் பகுதியில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்குப் பொருட்களை எடுத்துச் செல்ல, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை மட்டுமே இதுவரை வர்த்தகர்கள் நம்பியிருந்தனர். இந்த நெடுஞ்சாலை, மழை மற்றும் பனிக்காலங்களில் அடிக்கடி மூடப்படுவதால், வர்த்தகர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், அப்பிராந்தியத்துக்கு முதல் சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்தச் சரக்கு ரயில் சேவை, தோட்டக்கலை விளைபொருட்களை 24 மணி நேரத்துக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல உதவும். மேலும், போக்குவரத்து செலவும் குறையும்.

இது ஆப்பிள் போன்ற அழுகும் பொருட்களை விரைவாகச் சந்தைக்குக் கொண்டு செல்ல உதவுவதால், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel