இஸ்ரோ, ககன்யான் திட்டத்திற்காக, பாராசூட் மூலம் விண்கலத்தின் வேகத்தை குறைக்கும் அமைப்பின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் புதிய ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரையில் நடைபெற்றது. இது எதிரிகளின் விமானங்கள், ட்ரோன்களை விரைவாக தடுக்கும் சோதனையாகும்.
இஸ்ரோ, இந்திய விமானப்படை, DRDO, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் இந்த கூட்டுச் சாதனை, இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு பெரிய படியை எடுத்து வைத்துள்ளது.
விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பூமிக்கு திரும்பும்போது, விண்கலத்தின் வேகத்தை குறைக்கவே இந்த சோதனை நடத்தப்படுகிறது. இது விண்வெளியில் இருந்து மனிதர்களை சுமந்துவரும் விண்வெளி ஓடத்தை கடலில் இருந்து மீட்டெடுக்கும் சோதனையாகும்.
இந்தாண்டு இறுதியில் ககன்யான் திட்டத்திற்கான ஆளில்லா விண்கல பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
0 Comments