கலாச்சார அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் தன்னாட்சி அறக்கட்டளையாக செயல்படும் இந்திராகாந்தி தேசிய கலைகள் மையம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக லக்னோவில் செயல்படும் பீர்பால் சஹானி தொல்பொருள் அறிவியல் நிறுவனத்துடன் இன்று புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு நாட்டின் அறிவியல் மற்றும் கலாச்சார சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் ஒருங்கிணைந்த அறிவியல், கலாச்சார தளத்தை உருவாக்குவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி பலதுறை ஆராய்ச்சிகள், கூட்டுநிகழ்வுகள் மற்றும் நிபுணத்துவ பகிர்வுகள் மேற்கொள்ளப்படும். ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல், பாதுகாப்பு, அருங்காட்சியக மேம்பாடு, களப்பணி, ஒலி-ஒளிப் பதிவுகள், வெளியீடுகள், பயிற்சி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகிய செயல்பாடுகளை இரண்டு அமைப்புகளும் கூட்டாக மேற்கொள்ளும்.
0 Comments