Recent Post

6/recent/ticker-posts

நாடு முழுவதும் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க மை பாரத் புரிந்துணர்வு ஒப்பந்தம் / My Bharat MoU to develop one lakh young leaders across the country

நாடு முழுவதும் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க மை பாரத் புரிந்துணர்வு ஒப்பந்தம் / My Bharat MoU to develop one lakh young leaders across the country

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலத்துறையின்கீழ் செயல்படும் மை பாரத் அமைப்பு அறிவுப்பகிர்தல், திறன் கட்டமைப்பு, இளைஞர் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயலாற்றுவதற்காக அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

நாடு முழுவதும் 18-29 வயதுப் பிரிவினரில் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை செயலாக்க உதவும் வகையில் இந்தக் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆளுகை, பொதுக்கொள்கை, சமுதாயத் தொழில்முனைவு, டிஜிட்டல் கல்வியறிவு, நிதிசார் கல்வியறிவு ஆகியவற்றில் கூட்டுச் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் கீழ் இதன் காலம் நீட்டிக்கப்படலாம்.

தலைமைத்துவ செயல்திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துதல், மாநாடுகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துதல், கூட்டாக இணைந்து ஆய்வு மேற்கொள்ளுதல், இளைஞர்களுக்காக சேவை ஆற்றும் நிறுவனங்களுக்கு திறன் கட்டமைப்பு பயிற்சி அளித்தல் ஆகியவற்றை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட தொடர்பு இடங்களில் மற்றும் கூட்டு பணிக்குழுக்கள் மூலமாக கீழ்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தலைமைத்துவ மேம்பாட்டிற்காக இளையோர் மாநாடுகள் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்படும்.

இளைஞர்களுக்கு சேவையாற்றும் நிறவனங்கள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு திறன் கட்டமைப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இளையோர் தலமைத்துவத்தில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

இளையோர் தலைமைத்துவம் மற்றும் திறன் கட்டமைப்பில் சிறந்த நடைமுறைகள் பரவலாக்கப்படும்.

மைபாரத் மற்றும் அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளி இடையே பயிற்சியாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள்.

பயிற்சிக்கான கருவிகள், பாடத்திட்டம், மதிப்பீடு செய்தல் ஆகியன மேம்படுத்தப்படும்.

நாடு முழுவதும் இளம் தலைவர்களை இணைப்பதற்காக நெட்வொர்க்கிங் முயற்சி மேற்கொள்ளப்படும்.

தகுதி அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையில் ஆன்லைனில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் நாட்டின் இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் தலைமைத்துவத் திறன்களில் பயிற்சி அளிக்கும் செயல்திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel