புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது.
இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் இந்தக் கூட்டணியில் நேபாளம் இணைந்திருப்பதாக ஐபிசிஏ சனிக்கிழமை அறிவித்தது.
புலி, பனி சிறுத்தை, சிறுத்தை ஆகிய விலங்கினங்கள் காணப்படும் நிலப்பரப்பைக் கொண்ட நேபாளம், ஐபிசிஏ-இல் இணைந்திருப்பது பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான சா்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்தும் என ஐபிசிஏ தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 2009-இல் வெறும் 121 புலிகள் இருந்த நிலையில், இறுதியாக 2022-இல் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி அவற்றின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.
0 Comments