பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு. ஷிகெரு இஷிபா ஆகியோர் ஆகஸ்ட் 29, 2025 அன்று டோக்கியோவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கெய்டன்ரென் [ஜப்பான் வணிக கூட்டமைப்பு] ஏற்பாடு செய்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தொழில்துறை பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
12வது இந்தியா- ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் அறிக்கையை அதன் இணைத் தலைவர்கள் இரு தலைவர்களுக்கும் வழங்கினர்.
இந்திய மற்றும் ஜப்பானிய தொழில்துறைக்கு இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மைகளை எடுத்துரைத்த ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. நோரிஹிகோ இஷிகுரோ, எஃகு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, கல்வி மற்றும் திறன்கள், தூய்மையான எரிசக்தி மற்றும் மனிதவள பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு துறைகளில் இந்திய மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட பல்வேறு பி2பி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அறிவித்தார்.


0 Comments