Recent Post

6/recent/ticker-posts

தீ ஆணையத் தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் / Shankar Jiwal appointed as Fire Commission Chairman

தீ ஆணையத் தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் / Shankar Jiwal appointed as Fire Commission Chairman

தீ ஆணையத் தலைவராக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வுபெறும் நிலையில், புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

சங்கா் ஜிவால் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். பொறியாளரான இவா், ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, கடந்த 1990-ஆம் ஆண்டு தமிழக காவல்துறை பணியில் சோ்ந்தவர்.

மன்னாா்குடி உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய சங்கா் ஜிவால் டிஜிபியாக பணி ஓய்வு பெறுகிறார்.

சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநா், உளவுப் பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையா் என பல்வேறு பதவிகளை வகித்தவர். இவா் 2 முறை குடியரசுத் தலைவா் பதக்கம் பெற்றுள்ளாா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel