விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரோத் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் இயக்கப்பட்டது. கிழக்கு கடற்படை கமாண்ட்டிங் தலைமை தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் பென்தர்கர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் கப்பல் கட்டும் தளத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆண்ட்ரோத் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது, உள்நாட்டுமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கடற்படையின் தொடர்ச்சியான படிகளில் மற்றொரு முக்கிய நிகழ்வாகும் என்று கிழக்கு கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments