2025-26 ரபி பருவத்தில் (01.10.2025-31.03.2026) பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலைகளை நிர்ணயிப்பதற்கான உரத்துறையின் பரிந்துரைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
2025-26 ரபி பருவத்தில் தற்காலிக பட்ஜெட் தேவை ரூ.37,952.29 கோடியாகும். இது 2025 காரீஃப் பருவத்திற்கான பட்ஜெட் தேவையைவிட சுமார் ரூ.736 கோடி அதிகமாகும்.
டை அமோனியம் பாஸ்பேட், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்ஃபர் உள்ளிட்ட பாஸ்பேட் பொட்டாசியம் உரங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட விலையின் அடிப்படையில், மானியங்கள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்த செலவில் இந்த உரங்கள் சீராகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இது வழங்கப்படும்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள், மானிய விலையிலும் குறைந்த விலையிலும் மற்றும் உகந்த விலையின் அடிப்படையில் கிடைப்பது உறுதி செய்யப்படும். உரங்கள் மற்றும் இடுபொருட்களின் சர்வதேச விலைகளில் சமீபத்திய நிலைகளைக் கருத்தில் கொண்டு பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான மானியங்கள் நிர்ணயிக்கப்படும்.


0 Comments