இந்திய கடற்படை, இந்தோனேஷிய கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளும் இருதரப்பு கூட்டுப்பயிற்சியின் ஐந்தாவது பதிப்பான சமுத்ரா சக்தி-2025 விசாகப்பட்டினத்தில் 2025 அக்டோபர் 14 முதல் 17 வரை நடைபெறுகிறது.
இந்திய கடற்படையின் நீர் மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐஎன்எஸ் கவரட்டி, இந்தோனேஷிய கடற்படையின் கேஆர்ஐ ஜான் லி போர்க்கப்பல் ஆகியவை பங்கேற்கின்றன.
இருதரப்பு கப்பல் பயணம், கூட்டு யோகா அமர்வுகள், நட்பு ரீதியிலான விளையாட்டுகள், நிபுணர்களின் கருத்து பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் துறைமுகத்தில் நடைபெறும் பயிற்சியின் போது மேற்கொள்ளப்படுகின்றன.
கடல் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் இயக்குதல், விமானப் பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், தேடுதல் மற்றும் பறிமுதல் பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.


0 Comments