ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், தன்வி சா்மா 7-15 12-15 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் அன்யபட் பிசிட்பிரீசசாக்கிடம் வீழ்ந்தார். எனினும், அவர் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கடந்த காலங்களில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருந்த இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்களையும், இன்னொரு வீராங்கனை அபர்னா போபட் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


0 Comments