Recent Post

6/recent/ticker-posts

நாடு முழுவதும் 5862 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves opening of 57 new Kendriya Vidyalaya schools across the country at a cost of over Rs. 5862 crore

நாடு முழுவதும் 5862 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves opening of 57 new Kendriya Vidyalaya schools across the country at a cost of over Rs. 5862 crore

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அதிகரித்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.

2026-27 முதல் ஒன்பது ஆண்டு காலத்தில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்குவதற்கான மொத்த நிதி தேவை 5862.55 கோடி (தோராயமாக) ரூபாயாகும்.

இதில் மூலதனச் செலவாக 2585.52 கோடி (தோராயமாக) ரூபாயும், செயல்பாட்டுச் செலவாக 3277.03 கோடி (தோராயமாக) ரூபாயும் அடங்கும்.

தேசியக் கல்விக் கொள்கை, 2020-க்கான முன்மாதிரிப் பள்ளிகளாக, முதன்முறையாக, இந்த 57 கேந்திரிய பள்ளிகளில் பால்வாடிகள், அதாவது 3 ஆண்டுகள் தொடக்கக் கல்விக்கு முந்தைய நிலையிலான வகுப்புகள், தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் படைகள் உட்பட மத்திய அரசில் பணியிட மாற்றம் செய்யக்கூடிய மற்றும் இடமாற்றம் செய்ய முடியாத ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் சீரான தரத்தில் கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 1962 - ம் ஆண்டு நவம்பரில் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் தொடங்கும் திட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்தது. இதன் விளைவாக, "மத்திய பள்ளிகள் அமைப்பு" மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு பிரிவாகத் தொடங்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel