குஜராத் மற்றும் ஹரியானாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக 2025–26 நிதியாண்டில் 15-வது நிதி ஆணைய மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
குஜராத்தில், 2024–25 நிதியாண்டிற்கான 2-வது தவணையாக ரூ. 522.20 கோடி மதிப்புள்ள அனைத்துப் பயன்பாட்டுக்கான மானியங்கள் 38 மாவட்ட பஞ்சாயத்துகள், 247 தகுதியான வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் 14,547 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 2024–25 நிதியாண்டில் அனைத்துப் பயன்பாட்டுக்கான மானியங்களின் முதல் தவணையில் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதியான ரூ. 13.5989 கோடி தகுதியான 6 மாவட்ட பஞ்சாயத்துகள், 5 வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் 78 கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதலாக விடுவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு 2025–26 நிதியாண்டிற்கான முதல் தவணையாக ரூ. 195.129 கோடி மதிப்பிலான அனைத்துப் பயன்பாட்டுக்கான மானியங்களை விடுவித்துள்ளது. இது 18 மாவட்ட பஞ்சாயத்துகள், 134 தகுதியான வட்டாரப் பஞ்சாயத்துகள், 6,164 கிராம பஞ்சாயத்துகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.


0 Comments