கேரளம், ஆந்திரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிகார், சத்தீஸ்கர் ஆகிய 9 மாநிலங்களில் மீட்பு மற்றும் புனரமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க, தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து வழங்குவதற்கான முன்மொழிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.
இந்த உயர்மட்டக் குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் நீதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
11 நகரங்களுக்கான நகர்ப்புற வெள்ள அபாய மேலாண்மை திட்டத்தின் (UFRMP) கட்டம் 2-க்கும் உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. போபால், புவனேஸ்வர், குவாஹாட்டி, ஜெய்ப்பூர், கான்பூர், பாட்னா, ராய்ப்பூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், இந்தூர் மற்றும் லக்னோவுக்கு மொத்தம் ரூ. 2444.42 கோடி தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


0 Comments