மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், சமீபத்தில் ஐஐடி புவனேஸ்வரில் 'நமோ செமிகண்டக்டர் ஆய்வகம்' அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும். திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 4.95 கோடி ஆகும்.
நமோ செமிகண்டக்டர் ஆய்வகம் இளைஞர்களுக்கு தொழில்துறைக்கு தேவையான திறன்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் ஆழமான திறன் வளத்திற்கு பங்களிக்கும். இந்த ஆய்வகம் ஐஐடி புவனேஸ்வரை செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மையமாக நிலைநிறுத்தும்.
புதிய ஆய்வகம் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் இந்தியாவில் வடிவமைப்போம் முன்முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கும். இது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் செமிகண்டக்டர் சூழலமைப்புக்கு உந்து சக்தியாக செயல்படும்.
உலகளாவிய சிப் வடிவமைப்பு திறமையில் 20 சதவீதம் இந்தியாவில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள 295 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தொழில்துறையால் வழங்கப்பட்ட சமீபத்திய பகுப்பாய்வுகளை பயன்படுத்துகின்றனர். 20 நிறுவனங்களிலிருந்து 28 மாணவர்கள் வடிவமைத்த சிப்கள் எஸ்எல்சி மொஹாலியில் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
ஐஐடி புவனேஸ்வர் ஏற்கனவே சிலிக்கான் கார்பைடு ஆராய்ச்சி மற்றும் புதுமை மையத்தை (SiCRIC) கொண்டுள்ளது. நாட்டில் செமிகண்டக்டர் தொழில்துறையை ஆதரிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை இது வழங்கும்.

0 Comments