ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) 15-வது நிதி ஆணையத்தின் மானியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய மானியத் தொகையின் முதல் தவணையாக 410.76 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து 13 மாவட்ட பஞ்சாயத்துகள், 650 தகுதி வாய்ந்த பஞ்சாயத்து தொகுதிகள் மற்றும் அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 13,327 கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகளில் 13,092 தகுதியுள்ள கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகள் பயனடையும்.
மத்திய அரசின் இந்த மானியத் தொகை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் ஆகியவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்காக, அதாவது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 11-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 29 திட்டங்களின் கீழ் பயன்படுத்தப்படும்.
இதில் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் இதர செலவுகள் இடம் பெறாது. திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை பராமரிப்பது மற்றும் துப்புரவு பணிகள், வீடுகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை சுத்திகரிப்பது மற்றும் அதன் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட மனித பயன்பாடுகள் போன்ற அடிப்படை சேவைகளுக்காக இந்த மானியத் தொகை செலவிடப்படும்.


0 Comments