தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.10.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற டிட்கோ, BCI ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான "AeroDefCon 2025" என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இம்மாநாடு, அக்டோபர் 7 முதல் 9 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இம்மாநாடு தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சூழலுடன் இத்துறை சார்ந்த சர்வதேச நிறுவனங்களை இணைக்கும் முக்கிய தளமாக விளங்கும்.


0 Comments