கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ. மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார். தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்துக்கு, ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சிறிது தொலைவு நடந்துசென்ற முதல்வர் ஸ்டாலின், பின்னர் தனது வாகனத்தில் பயணித்தார்.
தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் - அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலம் ரூ. 1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.


0 Comments