குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (அக்டோபர் 6, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கினார்.
தன்னார்வ சமூகப் பணியில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பத்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகம் மற்றும் அவற்றின் பத்து திட்ட அதிகாரிகளுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகளுக்கான விருது பெற்றவர்களில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ் ஜெயகுமாரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்டத்தின் தாரக மந்திரம் ‘நான் அல்ல, நீயே’ என்பதாகும். நாட்டின் இளைஞர்களிடையே தன்னார்வ சமூக சேவை மூலம் ஆளுமையையும் குணத்தையும் வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.


0 Comments