இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் விமான சேவை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் சிறிய ரகத்திலான விமானங்கள் அதிகம் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உடான் திட்டத்தின்கீழ் மேற்கண்ட எஸ்ஜே-100 விமானம் தயாரிக்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடட் (எச்ஏஎல்) நிறுவனம் ரஷியாவின் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசனுடன் (பிஜேஎஸ்சி - யுஏசி) ஒப்பந்தம் போட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தம் மாஸ்கோவில் திங்கள்கிழமை (அக். 27) கையெழுத்தானது. இந்தியாவில் இத்தகையதொரு பயணிகள் விமானம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.


0 Comments