Recent Post

6/recent/ticker-posts

அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம் / Mineral agreement between the United States and Australia

அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம் / Mineral agreement between the United States and Australia

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அவர் நேற்று (அக். 20) சந்தித்தார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இடையில் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.75 ஆயிரம் கோடி) மதிப்பிலான அரிய கனிம வள ஒப்பந்தத்தில், அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் அல்பானீஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்த 6 மாதங்களுக்கு அரிய கனிம சுரங்கங்கள் மற்றும் அதன் செயலாக்கத் திட்டங்களுக்கு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அரசுகள் தலா 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதற்கு சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், மாற்று வழியாக இந்தப் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சீன அரசின் நடவடிக்கைக்கு அதிபர் டிரம்ப் வரும் நவம்பர் மாதம் முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீது கூடுதலாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel