Recent Post

6/recent/ticker-posts

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற மீராபாய் சானு / Mirabai Chanu wins silver at World Championships

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற மீராபாய் சானு / Mirabai Chanu wins silver at World Championships

உலக சாம்பியன்ஷிப் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் இத்துடன் இவர் மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு 48 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றுள்ளார். இதற்கு முன்பாக 2017, 2022 உலக சாம்பியன்ஷிப்பில் முறையே வெண்கலம், வெள்ளி வென்றிருந்தார்.

தற்போது, நார்வேயில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப் பிரிவில் (84 கிலோ ஸ்நாட்ச் + 115 கிலோ க்ளீன், ஜெர்க்) மொத்தமாக 199 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளி வென்றுள்ளார்.

வட கொரியாவைச் சேர்ந்த ரி சாங் கும் 213 கிலோ (91 கிலோ + 122 கிலோ) பளுவைத் தூக்கி தங்கம் வென்றார். மேலும், க்ளீன், ஜெர்க் பிரிவில் 122கிலோ பளுவைத் தூக்கி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தான்யத்தோன் சுக்சரோயன் 198 கிலோ (88 கிலோ + 110 கிலோ) பளுவைத் தூக்கி வெண்கலம் வென்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel