காவல் படையை வலுப்படுத்தம் விதமாக புதிதாக கோவா கப்பல் கட்டும் தளத்திலிருந்து ரோந்து கப்பல் தயாரிக்கப்பட்டு சனிக்கிழமை காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு இயக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அக்சர் என்று பெயரிடப்பட்ட புதிய கப்பல் சுமாா் 51 மீட்டர் நீளமும் 320 மெட்ரிக் டன் ஆகும். மணிக்கு 27 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது.
புதிய ரோந்துக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டு, நாட்டுக்கு அா்ப்பணிப்பு செய்யும் நிகழ்ச்சி காரைக்கால் தனியார் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா கலந்து கொண்டு கப்பலை முறைப்படி நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.


0 Comments