Recent Post

6/recent/ticker-posts

NOBEL PRIZE IN ECONOMICS 2025 / 2025ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

NOBEL PRIZE IN ECONOMICS 2025
2025ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

NOBEL PRIZE IN ECONOMICS 2025 / 2025ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

TAMIL

NOBEL PRIZE IN ECONOMICS 2025 / 2025ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் கடந்த 06ஆம் தேதி (06.10.2025) முதல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி என நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டன. 

இந்நிலையில் இந்த (2025) ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோக்கர், பிலிப் அகியான், பீட்டர் ஹர்விட் என 3 பேருக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மூவருக்கும் 8.25 கோடி ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது ராயல் ஸ்வீடிஸ் அறிவியல் அகாடமி சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான நிபந்தனைகள் அடையாளம் காணுதல், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காகவும் வழங்கப்படுகிறது.

கடந்த 1969ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 56 ஆண்டுகளாகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 57வது முறையாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ENGLISH

NOBEL PRIZE IN ECONOMICS 2025: The Nobel Prize is awarded annually to those who have made outstanding contributions to humanity in the fields of physics, chemistry, medicine, peace, economics and literature.

The Nobel Prize is awarded annually in memory of Swedish industrialist and scientist Alfred Nobel, in accordance with his wishes. The Nobel Prize is considered one of the most prestigious prizes in the world.

In this regard, the announcements about the Nobel Prize for the year 2025 have been released since the 6th (06.10.2025). In this regard, the Nobel Prizes for Physics, Chemistry, Literature and Peace were announced in order.

In this case, the Nobel Prize in Economics for this year (2025) has been announced jointly to 3 people, Joel Mocker, Philip Akhian and Peter Harwitt. With this, a cash prize of 8.25 crore rupees will also be given to the three. 

This announcement has been made on behalf of the Royal Swedish Academy of Sciences. It is stated that the Nobel Prize is awarded for explaining innovation-based economic growth.

That is, it is awarded for identifying the conditions for sustainable development through technological progress and for the theory of sustainable development through creative destruction. 

The Nobel Prize in Economics has been awarded since 1969. In that regard, it is noteworthy that the Nobel Prize in Economics has been awarded for the 56th time, while the Nobel Prize in Economics has been awarded for the 57th time.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel