பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 8 புதன்கிழமை நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) முதல் கட்டத்தை திறந்து வைத்தார். இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையம் என்ற பெருமையை இந்த விமான நிலையம் பெற்றுள்ளது.
ஆண்டுக்கு 2 கோடி பயணிகளை இந்த விமான நிலையம் கையாளும் என்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவி மும்பை விமான நிலையம் ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது பல விமான நிலையங்களைக் கொண்ட நகரங்கள் அல்லது பரந்த பெருநகரப் பகுதிகளின் உலகளாவிய பட்டியலில் மும்பையை சேர்க்கிறது. லண்டன், நியூயார்க் மற்றும் டோக்கியோ ஆகியவை அடங்கும்.


0 Comments