நாட்டின் மேம்பட்ட, பன்முக தாக்குதல் போா் விமானமான ரஃபேல் போா் விமானத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை பறந்தார்.
ஹரியாணாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்முறையாக ரஃபேல் விமானத்தில் திரெளபதி முர்மு பறந்துள்ளார். முன்னதாக, 2023ஆம் ஆண்டு சுகோய்-30 போா் விமானத்தில் முர்மு பறந்துள்ளார்.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத் தயாரிப்பான ரஃபேல் விமானம், இந்திய விமானப் படையில் கடந்த 2020, செப்டம்பரில் முறைப்படி இணைக்கப்பட்டது.


0 Comments