Recent Post

6/recent/ticker-posts

பருப்பு உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves plan to achieve self-sufficiency in pulses production

பருப்பு உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves plan to achieve self-sufficiency in pulses production

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தன்னிறைவு நிலையை அடைவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியான பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

2025-26 முதல் 2030-31 வரை ஆறு ஆண்டு காலத்திற்கு, 11,440 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவில் பயிரிடும் முறைகள் மற்றும் உணவு முறைகளில் பருப்பு வகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாகவும், அதிக நுகர்வோரை கொண்ட நாடாகவும் உள்ளது.

அதிகரித்து வரும் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்துடன், பருப்பு வகைகளின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இருப்பினும், உள்நாட்டு தேவைக்கு ஏற்ப அதன் உற்பத்தி இல்லை என்பதால், பருப்பு இறக்குமதி 15-20% வரை அதிகரித்துள்ளது.

இந்த இறக்குமதி சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், 2025-26 - ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 6 ஆண்டு கால "பருப்பு வகை உற்பத்தியை அதிகரிப்பதற்கான தற்சார்பு இயக்கம்" அறிவிக்கப்பட்டது.

வேளாண் ஆராய்ச்சி, விதை அமைப்புகள், பரப்பளவு விரிவாக்கம், கொள்முதல் மற்றும் விலை நிலைத்தன்மையை உள்ளடக்கிய ஒரு விரிவான உத்தியை இந்த இயக்கம் ஏற்றுக்கொள்ளும்.

அதிக உற்பத்தித்திறன், பூச்சி கொல்லி மருந்து மற்றும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தைத் தாங்கி வளரும் திறன் கொண்ட புதிய வகை பருப்பு வகைகளை உருவாக்கி பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

பருப்பு சாகுபடி செய்யும் முக்கிய மாநிலங்களில் அதற்கான சூழலை உறுதி செய்வதற்காக பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

கூடுதலாக, உயர்தர விதைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மாநிலங்கள் ஐந்து ஆண்டு கால சூழல் விதை உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்கும். இனப்பெருக்க விதை உற்பத்தி இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தால் மேற்பார்வையிடப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel